சிவகங்கை : தமிழ்நாடு முதலமைச்சர், பசுமையான தமிழகத்தினை உருவாக்கிட வேண்டும் என்ற அடிப்படையில், “பசுமை தமிழ்நாடு” இயக்கத்தினை துவக்கி வைத்துயள்ளார்கள். அதனடிப்படையில், நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதனை முறையாக பராமரிக்கவும் அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட முழுவதும் அதிகளவில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, அதனை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளையின் சார்பாக, கல்வி நிறுவனங்களில் 50,000 மரக்கன்றுகள் நடும் இயக்கம் செயல்படுத்திட திட்டமிடப்பட்டு, அதன் தொடக்கமாக, இன்றையதினம் மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் திரு.மு.அப்பாவு, மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.திரு.பெரியகருப்பன், ஆகியோர்களின் திருக்கரங்களால் மரம் நடும் நிகழ்வு காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதனை முறையாகப் பராமரித்து பசுமையாக மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தினை உருவாக்கிடவும், இதுபோன்று பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசுடன் இணைந்து பசுமையாக தமிழகத்தினை உருவாக்குவதற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் க.வானதி, இந்திய மருத்துவக்கழக காரைக்குடி கிளை மருத்துவர்கள் திரு.மணிவண்ணன், திரு.காமாட்சி சந்திரன், திரு.ராசு, திரு.குமரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.திருப்பதிராஜன், திரு.சத்தியன், ராஜேஸ்வரி மற்றும் பள்ளி தலைமையாசிரியர், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்