சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசை பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டுவதற்க்கு அரசின் சார்பில் 2020 ஆம் ஆண்டு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, வாணியங்குடி ஊராட்சியில் பனங்காடி சாலையில் சுமார் 75 சென்ட் நிலப்பரப்பில் மாவட்ட அரசு இசை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய ஏழு துறைகளுக்கு உரிய வகுப்பறைகள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்கென மொத்தம் பத்து அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.
இப்பணிகள் தொடர்பாக இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்படடது. இப்பணிகளை, தரமான முறையில் நிறைவுற்று, பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி,இ.ஆ.ப., தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, பொது பணித்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்பொறியாளர் பெருமாள்சாமி மற்றும் இசைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர்.தி.சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி