மதுரை : வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் இயக்குனர் முனைவர் திரு.ச. நடராஜன் அவர்களின் முன்னிலையில் மண்டல அளவிலான 6 மாவட்டங்களில் கலந்தாய்வு கூட்டம் மதுரை வேளாண்மை கல்லூரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை வாரிய உதவி செயல் அலுவலர் திரு. பூவராகவன், வேளாண்மை வணிக துணை இயக்குனர் திருமதி.நிர்மலா அவர்களுடன் 6 மாவட்டங்களை சேர்ந்த (மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர்) வேளாண்மை துணை இயக்குனர்கள், விற்பனைக்குழு செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கலந்தாய்வுக் கூட்டத்தில் உழவர் சந்தைகளின் செயல்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் செயல்பாடுகள் குறித்த கலந்தாலோசனை நடைபெற்றது. உழவர் சந்தைகளில் உள்ள கடைகளின் பயன்பாட்டு எண்ணிக்கைகளை அதிகரிக்கச் செய்யவும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினசரி உள் வரத்தினை அதிகரித்திட அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும் இ-நாம் பரிவர்த்தனை மூலம் வர்த்தகங்களை அதிகரிக்கச் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. குளிர் பதன கிடங்குகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அதிக அளவில் பயன்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை வழங்கினார். பிரதம மந்திரியின் சிறு தொழில் செய்பவர்களின் நிதி உதவி திட்டம் (PMFME) உரிய பயிற்சியில் மதுரையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பயிற்சியினை மேற்பார்வை செய்தார். இத்திட்டத்திற்கு நபார்டு மூலம் வழங்கப்பட்ட நிதி உதவியின் அடிப்படையில் MABIF- இன் கீழ் நிறுவப்பட்டுள்ள நிறுவனத்தின் முதற்கட்ட பணிகளை ஆய்வு செய்தார். 5 மாவட்டத்தைச் சார்ந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் நிர்வாக இயக்குனர்கள், செயல் தலைவர்களுடன் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஏற்படுத்திட கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. உழவர் உற்பத்தியாளர் குழு செயல் தலைவர்கள் மற்றும் இயக்குனர்கள், ஒருங்கிணைந்த கூட்டமைப்பு ஏற்படுத்தி பதிவு செய்திட கலந்துரையாடல் நடைபெற்றது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி