மதுரை : மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு மற்றும் மேலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மரு.எஸ்.அனீஷ் சேகர், ”வாழ்ந்து காட்டுவோம்” திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக, மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், கள்ளந்திரி மேலூர் ஊராட்சி ஒன்றியம், கிடாரிப்பட்டி மற்றும் ஏ.வலையப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு புதுவாழ்வுத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ள உற்பத்தியாளர் குழுக்களைச் சாரந்த உறுப்பினர்களுடன் திட்ட செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், தெரிவித்ததாவது, தமிழ்நாடு அரசு ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் (தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம்) என 2 பிரிவுகளாக திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், உள்ள மக்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி வாழ்க்கை தரத்தை மேம்படுத்துதல் நிதி ஆதாரங்களுக்கு வழிவகை செய்தல் வேலைவாய்ப்புகளை பெருக்குதல் ஆகியவற்றை இலக்காக கொண்டு தமிழ்நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கொட்டாம்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், மதுரை கிழக்கு ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் 137 ஊராட்சிகளில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வணிகம் மற்றும் தொழில் செய்வதற்கு ஏதுவான ஒரு சூழலை உருவாக்கி தனிநபர்கள் அல்லது விவசாயஃ உற்பத்தியாளர்ஃ தயாரிப்பாளர் கூட்டமைப்புகளாக ஒருங்கிணைத்திடவும் அவர்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை சந்தைப்படுத்திட வாய்ப்புகள் ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழில் முனைவோராக விரும்பும் மகளிருக்கும் இயற்கை சார் தொழில்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
புதிதாக தொழில் தொடங்கும் தனிநபர்கள் ஃ குழுக்களுக்கு தேவையான நிதி ஆதாரங்கள் ஏற்படுத்துவதற்கு வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு சிரமமின்றி கடனுதவி பெற வழிவகை செய்யப்படுகிறது. அதேபோலஇ கடன் தொகையை முறையே திருப்பி செலுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 108 உற்பத்தியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களில் ஏறத்தாழ 6இ500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இக்குழுக்களுக்கு ஆதார நிதியாக தலா 75 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் 81 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்களுக்கு ஏ.சி மெக்கானிக்
டூவிலர் மெக்கானிக் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகளும் மகளிருக்கு தையல் பயிற்சி
வாழை நார் பனையோலை மூலமாக உபயோகப் பொருட்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு தொழிற்பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. அதேபோல அரசு இ-சேவை மையங்கள் அமைப்பதற்கும் பயிற்சி வழங்கப்பட்டு வழிகாட்டப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சுற்றுப்பயண ஆய்வின்போது, வாழந்து காட்டுவோம் திட்ட அலுவலர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி