விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் மாணிக்கத்தான் கிணறு சாலையில், புதிதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்குஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு, அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது .
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ் .ஆர். ராமச்சந்திரன் , 341.50 லட்சம் மதிப்பீட்டில் ஆன புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி , தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் , இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன்,
யூனியன் சேர்மன் சிங்கராஜ் மற்றும் இராஜபாளைய நகர மன்றத் தலைவி பவித்ரா ஷியாம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி