மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை தேனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு வி. டி பாலு என்ற ஆதிமூலம் முன்னிலை ஜே. ரமேஷ் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மதுரை மேற்கு ஒன்றியம். மற்றும் கிராம நிர்வாக அலுவலர். மாலதி பாலகிருஷ்ணன் அவர்களும், வேளாண்மை அலுவலர் காதர் உசேன். என்.கற்பகம் பள்ளி கல்வித்துறை திருமதி கே.பைரவி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அவர்கள். தேனூர் ஊராட்சி மன்ற செயலர், திரு,ஸ்ரீதர் அவர்கள், திருமதி விக்னேஸ்வரி. கிராம சுகாதார செவிலியர். திருமதி பழனி அம்மாள், சோபனா, அமுதவல்லி,உமா திருமதி எம். முத்துப்பிள்ளை. மற்றும் தேனூர் ஊராட்சி மன்ற அனைத்து வார்டு உறுப்பினர்கள். பொன்னுச்சாமி, நீர் பாசன தலைவர் தேனூர். சி. நல்லமணி. ஏடிஎம்கே பிரமுகர். ஓ, ராஜேந்திரன். எக்ஸ். கவுன்சிலர் ஏ, கோபுரச்சாமி ஏ டி எம் கே செயலாளர், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வாக்காளர்கள் முகவரி திருத்தம் பெயர் சேர்க்க மற்றும் திருத்தம்.புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் பெற நவம்பர் மாதம் 6-13-20-27-11-2022 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடக்கும் என்ற செய்தி அறிவிக்கப்பட்டது.
சம்பா பருவத்திற்கு தேவையான உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்ட உரங்கள் போதிய அளவில் வேளாண்மை விரிவாக்கம் மையங்களில் இருப்பு உள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பை தவிர்க்க பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் பருவம் 2022 -23 ஆண்ட்ராய்ட் மொபைல் போனில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்தல் மற்றும் பாரத பிரதம மந்திரி கிசான் நிதி உதவி திட்டத்தில் ஆதார் அட்டை மற்றும் ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைத்தல். மற்றும் நுண்ணீர்ப்பாசன திட்டத்தின் கீழ் சொட்டு நீர் பாசனம், மற்றும் தெளிப்பு நீர் பாசனம் சிறு மற்றும் குரு விவசாயிகள் 100% மானியத்திலும் இதர விவசாயிகள் 75 %சதவீதம் மானியம் பெற தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள் மற்றும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. வீட்டுக்கு வீடு முருங்கைக்கீரை இனி இல்லை ரத்த சோகை,போன்ற பதாகைகள் வைக்கப்பட்டது.
தாய் சேய் நலத்திற்கு ஆதாரமாக முதல் ஆயிரம் நாட்கள் நலமான குழந்தைகள் வளமான தமிழகம் போன்ற பதாகைகள் இடம்பெற்றன. இந்த கிராம சபையில் குடிநீர், பிரச்சனை மற்றும் அனைத்து பொது பிரச்சனைகளும் ஆலோசிக்கப்பட்டது.சில சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியில் ஊராட்சி மன்ற உதவித் தலைவர். செந்தில் பாக்கியலட்சுமி அவர்கள் நன்றியுரை ஆற்றினார் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டு கூட்டம் மிக சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது