மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் சபை கூட்டத்தை புறக்கணித்த அதிமுக கவுன்சிலர்கள் பேரூராட்சி நிர்வாகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு விடுத்தனர். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில், தமிழக அரசின் அறிவுறுத்தலுக்கு இனங்க ,வார்டு குழு உறுப்பினர் சபை கூட்டம் நடைபெற்றது. இதில், அதிமுக வார்டு உறுப்பினர்களிடம் ஆலோசிக்காமலும், அவர்களை எதிர்த்து தேர்தலில் தோற்ற உறுப்பினர்களை நியமனம் செய்ததை கண்டித்து நேற்று நடைபெற்ற வார்டு குழு உறுப்பினர் சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இது தொடர்பாக, நேற்றைய முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து, வார்டு உறுப்பினர் அசோக் கூறியதாவது: வாடிப்பட்டி பேரூராட்சியில்,
வார்டு உறுப்பினர்கள் தலைமையில் வார்டு குழு சபை கூட்டம் அமைக்கப்பட வேண்டும் என்று, தமிழக அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால், அந்த உத்தரவை மதிக்காமல் ,வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகம் சர்வாதிகார போக்குடன் தங்களுக்கு வேண்டியவர்களை நியமனம் செய்துள்ளது.
மேலும், எங்களுக்கு எதிராக தேர்தலில் தோற்றவர்களை நியமனம் செய்து குழப்பம் விளைவித்து வருகிறது. இதனை, மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உடனடியாக விசாரித்து வார்டு பணிகள் முழுமையாக நடைபெற வார்டு உறுப்பினர்களுக்கு ஒத்துழைக்கும் குழு உறுப்பினர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்
என்று தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி