மதுரை : மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர் எல்லிஸ் நகர் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் உள்ள அரசு சார்பில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள குடிநீர் தொட்டியானது திடீரென இடிந்து கீழே விழுந்துள்ளது மேலும் அங்கு வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் குடிநீர் தொட்டியும் கீழே விழுந்ததால் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள அரசு குடியிருப்புகளும் கடுமையான சேதத்திற்காக உள்ள நிலையில் மழை நேரங்களில் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருக்கின்றனர்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில் 30 ஆண்டுகள் வரையில் பழமையான கட்டிடங்களை அரசு பராமரிக்கும் எனவும் இது 30 ஆண்டுகளை கடந்து இருப்பதால் அவர்களே பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார் எனினும் தொடர்ந்து இது போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளை கண்காணித்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார் உள்ளனர். மதுரை நகரில் பல இடங்களில், பாழடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. மதுரை செல்லூர் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில், மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள் குடியிருப்புகள், பயன்பாடு இல்லாமல் மோசமான நிலையில் உள்ளது. இதே போல சில பகுதிகளில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளும், சோழவந்தான் பூமேட்டு தெருவில், பழைய காவலர் குடியிருப்புகளின் கட்டிடங்களும், அகற்றப்படாமல் மோசமான நிலையில் உள்ளதாம். இது போன்ற பாழடைந்த குடியிருப்புகளை, பொதுப்பணித்துறையினர், உடனே அகற்ற ஆர்வம் காட்ட சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி