சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சுற்றுலாத் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலாத் தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றதை தொடர்ந்து, தெரிவிக்கையில்:
தமிழக அரசு சுற்றுலாத் துறையின் மூலம் தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்திடும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், உணவுடன் கூடிய தங்கும் விடுதி மற்றும் வீட்டில் தங்கும் விடுதி சாகச சுற்றுலா நடத்துபவர்கள் போன்ற சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின், இணையதளத்தில் பதிவு செய்திட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதும் சுற்றுலாத் தொழில் முனைவோர்களுக்கு பதிவுச் சான்றிதழ் இணைய தளத்தின் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான விவரங்களுக்கு, மாவட்ட சுற்றுலா அலுவலர், காரைக்குடி அவர்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் சிவகங்கை மாவட்டத்தை சிறந்த சுற்றுலா மாவட்டமாக மேம்படுத்த துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), சுற்றுலா அலுவலர் ச.வெங்கடாஜலபதி, உதவி சுற்றுலா அலுவலர் அ.சங்கர், மாவட்ட நியமன அலுவலர், உணவு பாதுகாப்புத் துறை மரு.பிரபாவதி, வட்டார போக்குவரத்து அலுவலர், மாவட்ட வன அலுவலர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), பிற துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி