மதுரை : மதுரை அமெரிக்கன் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற கல்விக்கடன் முனைப்புத் திட்டத்தின் கீழ் கல்விக் கடன் வழங்கும் முகாமில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர திரு.பி. மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.பழனிவேல் தியாகராஜன், ஆகியோர் மாணவ- மாணவியர்களுக்கு கல்விக் கடனுக்கான காசோலை வழங்கினார்கள். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அனிஷ்சேகர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. பூமிநாதன்,கூடுதல் ஆட்சியர் மாவட்ட முகமை திட்ட அலுவலர் அவர்கள், மாநகராட்சி துனை மேயர் திரு.நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி