மதுரை : மதுரை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையினால் சேதமடைந்துள்ள சாலைகள் சீரமைக்கும் பணிகள், வாய்க்கால்கள் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள் குறித்து, மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் திரு.சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக மழை அதிகளவில் பெய்து வருகிறது. இப்பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் வகையில் மண்டல வாரியாக மழைநீர் உறிஞ்சு வாகனங்கள், கழிவுநீர் உறிஞ்சு வாகனங்கள், ஜெனரேட்டர்கள், மின்மோட்டார்கள், பாதாளச் சாக்கடை மூடிகள், கொசு புகைப்பரப்பும் இயந்திரங்கள், மணல் மூடைகள், தெருவிளக்கு பராமரிப்பு வாகனங்கள் மற்றும் தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
மதுரை , கிருஷ்ணாபுரம் காலணி பகுதி சாலைகள் சீரமைக்கும் பணி, குறிஞ்சி நகர் 1வது தெருவில் பாதாள சாக்கடை சரிசெய்யும் பணிகள், சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள தண்டலை மற்றும் பீ.பீ.குளம் வாய்க்கால்களில் மழைநீர் சீராக வடிந்து செல்வதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மேயர், ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் வாசுகி, நகரப்பொறியாளர் அரசு, உதவி ஆணையாளர் காளிமுத்தன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், செயற்பொறியாளர் சேகர், உதவி செயற் பொறியாளர் ஆரோக்கியசேவியர், உதவிப்பொறியாளர்கள் முத்து ராமலிங்கம், சோலைமலை, மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி