சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற இரத்த தான முகாமினை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு.மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார். உடன் கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் திரு.ஜீனு, சிவகங்கை சரக துணைப்பதிவாளர் திரு.பாலச்சந்திரன், இணைப்பதிவாளர்/ பணியாளர் அலுவலர் திரு.நாகராஜன், துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்) திரு.குழந்தைவேலு, சிவகங்கை மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் திருமதி.ஷர்மிளாதிலகவதி, மருத்துவ கண்காணிப்பாளர் திரு.இராமநாதன், உதவி நிலைய மருத்துவர் முகமது திரு.ரஃபி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி