மதுரை : மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க. சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு. வெங்கடேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா கருப்பட்டி ஊராட்சியில் சுமார் 110 விவசாயிகள் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் அவரவர் நெல்களை கொள்முதல் செய்து பயன் அடைந்துள்ளனர். மேலும் கிராம விவசாயிகள் கூறும் பொழுது இந்த மழை காலங்களிலும் எங்களது நெல்லை அரசு கொள்முதல் செய்ததற்கும். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும். சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். மேலும் விவசாயிகள் கூறும் பொழுது மழைக்காலங்களில் தங்கள் பயிரிட்ட நெல்லை கொள்முதல் செய்த அரசு எந்த பாதிப்பும் இல்லாமல் தார்ப்பாய் கொண்டும். மரங்களால் ஆன மேடைகள் அமைத்து நெல் மூட்டைகளை பாதுகாப்பாகவும். மழையில் நனையாமல் பாதுகாப்பான சிறந்த திட்டமாக இந்த முறை கொள்முதல் நிலையம் அமைந்தது என்று இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது