மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான், தென்கரை வைகை பாலம் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை இணைக்கும் முக்கிய ஆற்று பாலமாக உள்ளது. சுமார் 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த பாலத்தை கடந்து மதுரை உள்ளிட்ட வெளியூர்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் தினந்தோறும் வேலைக்கு சென்று வருவதும், மாணவ மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வருவதும் தினந்தோறும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், வைகை பாலத்தில் உள்ள மின்விளக்குகள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக பழுதடைந்த நிலையில், இரவு நேரங்களில் எரியாமல் இருப்பதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் மது பிரியர்களின் கூடாரமாகவும் சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த பாலப்பகுதி இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆகையால் , சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக பழுதடைந்த மின்விளக்குகள் அனைத்தையும் சரி செய்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இல்லையென்றால் தொடர்ச்சியாக குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், மாலை வேலைகளில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் இந்த பாலத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால் இருட்டான இடங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
ஆகவே, நெடுஞ்சாலை துறையினர், பாலத்தின் மேல் உள்ள தெரு விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரியுள்ளனராம்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி