மதுரை : மதுரை மாவட்டம் மேலூர் அருகே வடக்கு நாவினிப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டி. கூலித் தொழில் செய்து வரும் இவருக்கு, முத்துப்பிள்ளை என்ற மனைவியும், பூமாயி என்ற திருமணம் ஆன மகளும், பூமிராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில், தனக்கு சொந்தமான ஓட்டு வீட்டில் வீட்டில், மனைவி, மகள், மகன் மற்றும் பேரன்களுடன் தூங்கி கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென்று வீடு இடிந்து விழுந்து முற்றிலும் சேதமானது. இதில் பாண்டியின் மனைவி முத்துபிள்ளை, மகள் பூமாயி, மகன் பூமிராஜ், மற்றும் பூமாயின் குழந்தைகளான புகழினி (4), தர்னுஷ் (1) ஆகியோர் சிக்கி காயமடைந்த நிலையில், இவர்களது அலறல் சப்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீடு இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமான நிலையில், குழந்தைகளுடன் தங்க இடமின்றி தவித்து வருவதால், அரசு உடனடியாக உதவி செய்ய வேண்டும் என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வீடு இடிந்து விழுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி