மதுரை : மதுரை மாவட்டம், சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.அனீஸ் சேகர், தலைமையில், நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , சுற்றுலாத்துறை சார்பாக, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , சுற்றுலா தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் சுற்றுலாப்பயணிகள் நலனை கருத்தில் கொண்டு, படுக்கை மற்றும் காலை உணவு நிறுவனங்கள் சாகச சுற்றுலா ஆப்ரேட்டர்கள், ஆப்ரேட்டர்கள்ஃகேரவன் பார்க் ஆப்ரேட்டர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் பொருட்டு, மதுரை மாவட்டத்திலுள்ள சுற்றுலா வழிகாட்டு நெறிமுறைகளை செயல்படுத்தும் வகையில் சுற்றுலா தொழில் முனைவோர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோருடன் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் , மாவட்ட சுற்றுலா அலுவலர் சோ.மு.பாலமுருகன் உட்பட சுற்றுலா தொழில் முனைவோர்கள் சுற்றுலாத்துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி