மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உரிய நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளை தங்களது கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அரசு நகர்ப் பேருந்து முன்கூட்டியே வந்ததால் , கிராம மக்கள் ஆவேசத்துடன் அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர். (மேலும், மற்றொரு சம்பவத்தில் அரசு நகர் பேருந்து பிரேக் பிடிக்காததால், முன்புறம் நின்ற காரின் பின்புறம் மோதி விபத்து) மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே டி. கொக்குளம் கிராமத்தைச் சார்ந்த கிராம மக்கள் , அரசு நகர் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடத்திற்கு பிறகு , அரசு நகர்ப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிய நேரத்தில் வருவதாக உறுதி அளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டனர்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து , திருமங்கலம் அருகே உள்ள திருமால் வழியாக புதுப்பட்டிக்கு வர வேண்டிய அரசு நகர் பேருந்து , மாலை 4 மணிக்கு பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து புதுப்பட்டிக்கு வரக் கூடிய மாணவிகளை ஏற்றுக் கொண்டு வர வேண்டிய அரசு நகர் பேருந்து, முன்கூட்டியே மாலை 2 மணிக்கு பயணிகளின்றி வந்ததால் ,
தங்களது பிள்ளைகளை, உரிய நேரத்தில் அரசு பேருந்தில் ஏற்றுக் கொண்டு வராமல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால் ஆவேசமடைந்த கிராம மக்கள் , நகர் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 20 நிமிடத்திற்கு பிறகு அரசு பேருந்து ஓட்டுனர், நடத்துனர் நாளை முதல் உரிய நேரத்தில் வருவதாக உறுதி அளித்த பேரில் போராட்டம் கைவிடப்பட்டன. இதனிடையே, மதுரையிலிருந்து திருமங்கலம் நோக்கி வந்த அரசு நகர் பேருந்து , பிரேக் பிடிக்காததால், கப்பலூர் அருகே நின்ற காரின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதனால், அரசு நகர் பேருந்தில் வந்த பயணிகள் 20 நிமிடத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டதால், பேருந்து ஓட்டுனர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி