மதுரை : ஆரம்பப் பள்ளி மாணவ மாணவிகள் வாழ்க்கையில் விளையாடுகிறது மாநகராட்சி.
சுற்றுச்சுவர் இடிந்து ஓராண்டு கடந்தும் சரி செய்யாத அவல நிலை உயிர்பலி ஆகும் நடவடிக்கை எடுக்குமா என்ற நிலை உள்ளதாம். மதுரை மாநகராட்சிக்கு, உட்பட்ட 71 வது வார்டு பழங்காநத்தம் உழவர் சந்தை அருகே செயல்பட்டு வருகிறது ஜெயகோபால் கரடியா பள்ளி. இது மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இதன் கழிவறை அருகே சுற்று சுவர் இடிந்து விழுந்து ஓர் ஆண்டை கடந்தும் பேரளவிற்கு வெறும் கருப்பு பலகை வைத்து அடைத்து வைத்துள்ளார்கள். மேலும், அருகில் உள்ள சுற்றுச் சுவர்கள் எந்த நேரத்திலும் கீழே நிலையில் உள்ளது. இது குறித்து, மாநகராட்சி அதிகாரியிடம் கேட்ட பொழுது, உடனடியாக சரி செய்து விடுவோம் என சொன்னார்கள். ஆனால், ஓராண்டு கடந்தும் அதே நிலை நீடிப்பதால், பள்ளி மாணவ மாணவிகள் கழிவறை அருகே செல்வதற்கு அச்சத்துடன் சென்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மழை காலம் என்பதால், எந்த நேரத்திலும் இடிந்து விழுந்த சுற்றுச்சூழல் பாதி மீண்டும் விழுந்துவிடுமோ என, உயிர் பயத்திலேயே பள்ளி மாணவ மாணவிகள் கழிவறை அருகே செல்ல வேண்டிய நிலையில் உள்ளது.
மேலும், கை கழுவும் இடமும் அங்கேயே இருப்பதால் அசம்பாவிதம் ஏதும் நிகழும் முன் முற்றிலுமாக அச்சொன்று சுவரை அகற்றி, புதிதாக சுற்றுச்சூழல் அமைக்க வேண்டும் என, பெற்றோர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர். உரிய நடவடிக்கை எடுத்தால், எதிர்கால மாணவ மாணவிகளின் நலன் காக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்குமா? மேலும், இதே போன்று பள்ளிக்கு எதிரே குப்பைத் தொட்டு ஒன்று உள்ளது. இதில், இறைச்சி கழிவுகளும் குப்பைகளும் காட்டப்படுகிறது. அதில், மொய்க்கும் ஈக்கள், மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிடும் போது ஈக்கள் வந்து அதில் உட்காருவதாலும், துர்நாற்றம் வீசுவதாலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோய் தொற்று ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி