மதுரை : மதுரையில் ஸ்விகி நிறுவன ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திடீரென மொத்த விடுப்பு – உணவு விநியோகம் சேவை பாதிப்பு அடைந்தது. ஸ்விகி நிறுவனத்தின் உணவு டெலிவரியின் போது ஊழியர்களுக்கு டெலிவரி ஒன்றுக்கு 5கிலோ மீட்டருக்கு 25ரூபாய் பணம் அளிக்கப்பட்ட நிலையில், 7கிலோ மீட்டருக்கு 25ரூபாய் என, ஊதிய தொகை குறைக்கப்பட்டதாகவும், மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் இன்று மொத்த விடுப்பு எடுத்ததனர்.
மேலும், திடீரென புதிய ஊதிய நடைமுறைகளால் ஊதியம் குறையும் நிலை உள்ளதாகவும், ஏற்கனவே ,பெட்ரோல் விலைவாசி உயர்வால் நாள்தோறும் செலவு அதிகரிக்கும் நிலை உள்ளதால் பழைய ஊதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும், புதிய ஊதிய நடைமுறைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்காமலேயே நடைமுறைப்படுத்தியதால் நாள்தோறும் ஊழியர்களின் ஊதியம் குறையும் நிலை உள்ளது. இது குறித்து, ஸ்விகி ஊழியர்கள் அலுவலக மேலாளரிடம் விளக்கம் கேட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவேன் என கூறுவதாக கூறி இதனால், அந்த பகுதிகளில் இருந்து ஸ்விகி டெலிவரி சேவை பாதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி