மதுரை : ட்ரூ காலர் இந்திய குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான தங்கு தடையற்ற தகவல் தொடர்புகளுக்கு உதவும் விதமாக ஆயிரக்கணக்கான அரசு அதிகாரிகளின் சரிபார்க்கப்பட்ட தொடர்பு எண்களை எளிதாக அணுகும் வசதியை வழங்கும் வகையில் அரசு டிஜிட்டல் தகவல் தொகுப்பு அடங்கிய ஒரு ஆப் தொடங்கியது. இது பயனர்களை எந்தவொரு பித்தலாட்டம்மோசடி மற்றும் வீண் செய்திகளிலிருந்தும் பாதுகாப்பதன் வழியாக குடிமக்கள் சேவைகளில் நம்பிக்கையை வளர்ப்பதில் ஒரு முக்கியமான படிநிலையாக விளங்கும். ட்ரூ காலர் ஆப் பயனர்களுக்கு யூனியன் பிரதேசங்கள் உட்பட சுமார் 23 மாநிலங்களின் அவசர கால உதவி எண்கள் சட்ட அமலாக்க முகமைகள் தூதரகங்கள் கல்வி நிறுவனங்கள் மருத்துவமனைகள் மற்றும் இதர முக்கியமான துறைகளை நேரடியாக அணுகும் வசதியை அரசு டிஜிட்டல் தொகுப்பு மூலமாக ட்ரூகாலர் செயலி வழங்குகிறது. இதில் அடங்கியுள்ள தகவல்கள் அரசாங்கத்திடமிருந்தும் அதிகாரப்பூர்வ அரசாங்க மூலாதாரங்களிடமிருந்தும் நேரடியாகப் பெறப்பட்டவை. அரசாங்கப் பிரதிநிதிகளை பொதுமக்கள் அணுகுவதற்கு உதவவும் மற்றும் அதை ஒழுங்குபடுத்தவும் மற்றும் 240 மில்லியனுக்கும் அதிகமான இந்திய ட்ரூகாலர் பயனர்கள் எந்த ஒரு தடையும் பிரச்சினையுமின்றி அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள உதவுவதே இந்த முன்முயற்சியின் நோக்கமாக அமைந்துள்ளது.
நெட்டிசன்கள்(இணைய பயன்பாட்டாளர்கள்) மற்றும் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களுடனான இடைவினைகளின் அடிப்படையில், இன்றைய காலத்தில் மிகவும் பரவலாக நடைபெற்றுவரும் மோசடிகளில் தொலைபேசி வழியாக அரசாங்க அதிகாரிகள் போன்று ஆள்மாறாட்டம் செய்வது என்பது முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்பதை ட்ரூ காலர் அறிந்துகொண்டது. தகவல்தொடர்புகளில் இந்த சரிபார்க்கப்பட்ட அரசாங்க தொடர்புத் தகவல் தொகுப்பை உருவாக்கும் ட்ரூ காலரின் செயல்பாடானது நம்பிக்கையை வளர்ப்பதற்கும் பித்தலாட்டங்கள் மற்றும் மோசடிகளிலிருந்து தங்கள் பயனர்களைப் பாதுகாப்பதற்கும் ட்ரூ காலர் இடைவிடாது தொடர்ந்து மேற்கொண்டுவரும் முன் முயற்சிகளில் ஒன்றாக விளங்குகிறது. மற்றும் இதில், சரிபார்க்கப்பட்டு உறுதி செய்யப்பட்ட எண்ணை அடையாளம் காணும் வகையில் பயனர்கள் பச்சை பின்னணியில் ஒரு நீல நிற டிக் குறியீட்டைக் காண்பார்கள். இதன் அடுத்த கட்டமாக பயனர்களின் பின்னூட்டத்தின் அடிப்படையில் இந்தத் தகவல் தொகுப்பை மேலும் விரிவு படுத்தி மாவட்ட மற்றும் நகராட்சி அளவுகளில் தொடர்பு எண்களை கூடுதலாக சேர்க்கும் முயற்சியில் ட்ரூகாலர் பல்வேறு அரசுத் துறைகளுடன் இணைந்து செயலாற்றி வருகிறது. எந்தவொரு அரசு நிறுவனமும் தகவல் தொகுப்பு அமைப்பில் தகவலைப் பகிர்ந்துகொள்வதற்கும் சரிபார்க்கப்படுவதற்குமான ஒரு எளிய செயல்முறையை ட்ரூ காலர் உருவாக்கியுள்ளது.
இந்த புதிய அம்சத்தின் அறிமுகம் குறித்து கருத்துத் தெரிவிக்கையில் ட்ரூகாலரின் பப்ளிக் அஃப்பையர்ஸ் இயக்குநர் பிரக்யாமிஸ்ரா கூறினார் “ட்ரூ காலர் ஒரு அழைப்பாளரை அடையாளம் காண உதவும் ஒரு சாதாரண செயலியாக மட்டுமே இல்லாமல் இன்று மேலும் பலபடிகள் உயர்ந்து டிஜிட்டல் தகவல் தொடர்புகளில் ஒரு நம்பகத்தன்மையை நிலைநாட்டி இந்தியாவில் நகர்ப்புற மற்றும் வளர்ந்து வரும் பகுதிநகர்ப்புற, கிராமப்புற சந்தைகளுக்கு இடையேயான டிஜிட்டல் இடைவெளியை இணைக்கும் பாலமாக செயல்பட்டுவருகிறது. அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்டம் செய்து மோசடிகள் மற்றும் பித்தலாட்டங்களில் பரவலாக ஈடுபடுபவர்களிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதே எங்கள் இந்த முயற்சிகளின் நோக்கமாகும். இந்த அம்சத்தின் மூலம் தங்களுக்குத் தேவையான சமயங்களில் குடிமக்கள் சரியான அதிகாரிகளை எளிதாக அணுக முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அரசாங்க எண்கள் அடங்கியுள்ள இந்த டிஜிட்டல் தொகுப்பே இதன் வகைகளிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட ஒன்றாக விளங்குகிறது மற்றும் பயனர்கள் வழங்கும் பின்னூட்டங்களின் அடிப்படையில் இதை மென் மேலும் சிறப்பாகச்செய்ய நாங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவோம். நம்பகத்தன்மையை வளர்த்தெடுப்பதன் மூலம் தகவல்தொடர்பு செயல்பாடுகளை பாதுகாப்பானதாக மாற்றியமைக்க எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து ஒழுங்கமைத்துக் கொள்வோம்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி