சேலம் : சேலம் மாவட்டம் மேட்டூர் நான்கு வழி சாலையில் சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளை மற்றும் நம்பிக்கை மையம் இணைந்து உலக எய்ட்ஸ் தினமானது சமப்படுத்துதல் உறுதிமொழி மூலம் அனுசரிக்கப்பட்டது. மேட்டூர் அரசு தொழிற்பயிற்சி கல்லூரி மாணவ மாணவிகள் 400 பேர் மற்றும் பேராசிரியர்கள் விழிப்புணர்வு பேரணி மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சதாசிவம், நகரம் மன்ற தலைவர் திருமதி. சந்திரா, ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டவர்கள் சேலம் மாவட்ட அரவாணிகள் தாய் விழுதுகள் அறக்கட்டளையின் திட்ட மேலாளர் மரியம்மாள், ஆலோசகர் குபேரன், ரம்யா, மற்றும் களப்பணியாளர்கள் நம்பிக்கை மையம் ஆலோசகர்கள் தமிழ்ச்செல்வி, தேவி, சந்திரன், ரவிக்குமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்