மதுரை : மதுரை மாநகர் மக்களின் தேவைக்கேற்ப மேலக்கால் வைகை ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் மதுரை மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இக்குழாயானது மேலக்கால் அருகே தாராபட்டி கொடிமங்கலம், கீழமாத்தூர், துவரிமான் என பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் ஆறாக ஓடுகிறது. குறிப்பாக, துவரிமான், மேலக்கால் ரோட்டில் உள்ள மேலமாத்தூர் கொடிமங்கலம் பகுதிகளில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக இதனை சரி செய்யாததால், ஏராளமான குடிநீர் வீணாகிறது.
இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது குடிநீர் குழாயின் உடைப்பு ஏற்பட்டு 24 மணி நேரமும் தண்ணீர் வீணாக ஆற்றில் கலக்கிறது. தற்போது நீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலைமை உள்ள நிலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நாள் முழுவதும் குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. குடிநீர் வீணாவதை பார்க்கையில் மனது வலிக்கிறது என்று கூறினர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி