சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இரண்டாவது மேம்பாட்டுக் கூட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசிரவிக்குமார் (மானாமதுரை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திட்ட செயலாக்க கோட்ட நிர்வாகப் பொறியாளர் இராமகிருஷ்ணன், உதவி நிர்வாகப் பொறியாளர் புஷ்பராஜன் மற்றும் இளநிலை பொறியாளர் பாஸ்டின் விக்டர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி