சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்தமைக்காக அவரது வாரிசுதாரராகிய மனைவிக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ₹1,00,000மதிப்பீட்டலான நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் காமாட்சி மற்றும் பலர் உடனிருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி