மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு, பொங்கல் பரிசு தொகுப்பில் நியாய விலை கடைக்கு வழங்கப்படும் பொருட்களை ஆய்வு செய்தார். மேலும், கிட்டங்கியில் உள்ள அரிசி கோதுமை சீனி எண்ணெய் ஆகியவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் டோக்கன் களை, அரசு நியாயவிலைக் கடை ஊழியர்கள் மட்டுமே வழங்குவர் இதில், அரசியல் தலையீடு இருக்காது. கரும்பு கொள்முதலில் விவசாயிகளுக்கு 33 ரூபாய் கரும்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் திறந்த வெளியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தானியங்கள் நனைவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், 108 மூடப்பட்ட தானியக்கிடங்குகள் கட்டப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு வரும்.
பொங்கல் பரிசு தொகுப்பில் தேங்காய் வழங்க வேண்டும் என பாஜக போராட்டம் நடத்துவது குறித்து கேள்விக்கு, பிஜேபியினர் அரசியல் காரணங்களுக்காக தேங்காய் வழங்க சொல்லி போராடி வருகிறார்கள். தமிழக முதல்வர் நியாய விலை கடையில் தேங்காய் எண்ணெய் வழங்க ஆலோசனை செய்து வருகிறார். ரேஷன் கடையில், நியமிக்கப்படும் நியமனங்களில் அரசு தேர்வாணையம் மூலம் நியமனம் செய்யும் எண்ணம் இல்லை அதிமுக ஆட்சியில் எவ்வாறு செயல்பட்டார்களோ அதன் படியே எங்கள் ஆட்சியிலும் இருக்கும் என்று கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி