மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் அமைந்துள்ள பெடரல் வங்கி மேலக்கால் கிளை சார்பாக, நாகமலை காலனி கிராமத்தை தத்தெடுக்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் சரவணன் தலைமை வகித்தார்.
சென்னை மண்டல தலைவர் இக்பால் மனோஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அணில் முன்னிலை வகித்தனர். மேலக்கால் மேலாளர் வைஷ்ணவி வரவேற்றார். தமிழகத்தின் முதன்முறையாக மத்திய அரசு திட்டத்தின் கீழ் பெடரல் வங்கி சார்பாக, நாகமலை காலனி கிராமத்தை தத்தெடுத்து அந்த கிராமத்திற்கு உள்ள தனிநபர் ஒவ்வொருவருக்கும் காப்பீடு செய்யப்பட்டது. அதன் டெபாசிட் தொகையை , வங்கி செலுத்தி திட்டம் துவக்கப்பட்டது.
இதில் ,வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், ஊராட்சி மன்றத் தலைவர் முருகேஸ்வரி வீரபத்திரன், துணைத் தலைவர் சாமி சித்தாண்டி, கிராம நிர்வாக அலுவலர் மாசாணம், பெடரல் வங்கி, மதுரை மண்டல தலைவர் வருண், மேலக்கால் முருகேசன், மற்றும் நாகமலை காலனி, மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி