மதுரை : மதுரை அருகே அவனியாபுரம், ஜல்லிக்கட்டு விழாவிற்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. 400 வருங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில், அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார், இருளன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
வாடிவாசல் விழாவிற்கு, மதுரை மாநகராட்சி மேயர் இந்து ராணி, மதுரை வருவாய் கோட்டச்சியர் பிர்தெளஸ் பாத்திமா, வட்டாட்சியர் முத்து பாண்டி, மண்டலத் தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் முகமது கலாம் முஸ்தபா ஆகியோர் முகூர்த்த கால் நட்டு வாடிவாசல் பணியை துவக்கி வைத்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை , மதுரை மாநகராட்சி சார்பில் நடத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்காக 17. லட்சத்து 61 ஆயிரம் டெண்டர் விடப்பட்டு , விழா மேடை பார்வையாளர் மேடை, தடுப்பு வேலிகள், கால்நடை பராமரிப்பு சோதனை மையம், மாடு பிடி வீரர்கள் சோதனை மையம், மாடுகள் சேகரிக்கும் இடம் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெறுகிறது.ஜல்லிக்கட்டு போட்டியின் முக்கிய அம்சமாக வாடிவாசல் அமைக்கும் பணியில் அவனியாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார், இருளன் ஆகிய இருவரது குடும்பத்தினர் பரம்பரை பரம்பரயாக வாடிவாசல். அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றாலும், வாடி வாசல் அமைக்கும் பணியில் மட்டும் பாரம்பரியமாக இவர்களுக்கே அரசு முன்னுரிமை அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி