மதுரை : மதுரை வடக்கு வாடிப்பட்டி தாலுகா முள்ளிப்பள்ளம் கிராம மயானத்தில் இரண்டு மரங்களில் விஷ வண்டுகள்-கதம்ப வண்டுகள் குடியிருந்து கொண்டு, தொடர்ந்து பொதுமக்களையும், மயான பணியாட்களையும், விவசாயிகளையும் கொட்டுவதால் அதனை பயன்படுத்த முடியாமலும், தீயணைப்புத்துறைபலமுறை-பல ஆண்டுகள் அவற்றை விரட்டி அடித்தும் முடியாததால், மரங்களோடு விஷ வண்டுகளை அப்புறப்படுத்த 24 ஆண்டுகளாக போராடி, தற்போது அவை அகற்றப்பட்டு , அனைத்து வசதிகளுடன் மயானம் விரிவாக்கம் செய்து முழு பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக அரசு அனுமதி பெற்று தந்தும், மயானத்திற்கு ஆற்றுப்பாலம் கட்டி கொடுத்தும் உதவிய வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மாண்புமிகு. அண்ணன் P.மூர்த்தியார் அவர்களுக்கும், கடந்த ஒரு வருடமாக போராடி, பலமுறை அலைந்து நேரடியாக உரிய அனுமதி பெற்று கொடுத்த, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர், பாசமிகு அண்ணன் நம்மில் ஒருவர் மதிப்பிற்குரிய A.வெங்கடேசன்.MLA அவர்களுக்கும், உயர்திரு.மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், உயர்திரு.வருவாய் கோட்டாசியர் அவர்களுக்கும், தீயணைப்புத்துறை,ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.
அரசின் டெண்டர் ஏலத்தை கிராமத்திற்கு எடுத்துக் கொடுத்த குருவித்துறை Ex.ஊ.ம.தலைவர், கவுன்சிலர், ஒன்றிய செயலாளர் K.பசும்பொன்மாறன் அவர்களுக்கும், கிராமத்திற்கு உறுதுணையாக இருந்த, காவல் ஆய்வாளர் உயர்திரு.A.சிவபாலன் அவர்களுக்கும், கிராம நிருவாக அதிகாரி உயர்திரு. A.மணிவேல் அவர்களுக்கும்,இதுவரை முயன்று போராடிய முன்னால் ஊ.ம.தலைவர்கள் பொன்.துரைப்பாண்டியன் R.குருமூர்த்தி P.நாகராஜன் M.லெட்சுமிமார்நாட்டான் N.சீதாநாகராஜன் ஆகியோர்க்கும், எங்களுடன் தோழோடு தோழ் நின்ற, கிராமத் தலைவர் K.கிருஷ்ணமூர்த்தி கிராம பொருளாளர் V.குமார் மீனாட்சிசுந்தரம் மண்ணின் மைந்தர், மூத்த வழக்கறிஞர் திரு.T.K.G கிருஷ்ணமூர்த்தி மண்ணின் மைந்தர் திரு.K.ரமணி(சுப்பிரமணியசாமி உதவியாளர்) முன்னாள் பொருளாளர்கள் திரு.V.சங்கர் ஐயர் திரு.S.சப்பாணி, திரு.M.முத்துராமலிங்கம், கிராமத்திற்கு வருவாய் தந்த வியாபாரி திரு.தங்கம்ஆகியோர்களுக்கும், உடனிருந்த அனைத்து நண்பர்களுக்கும், பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் தெரிவித்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது