மதுரை : திருப்பரங்குன்றம் மன்னர் கல்லூரியில், சமுக பணித்துறை மற்றும் CSI பல் மருத்துவ கல்லூரி இணைந்து மாணவர்களுக்கான சிறப்பு வாய் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் பரிசோதனைகள் நடைபெற்றது. மன்னர் கல்லூரி , சமுக பணிகள் துறை தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் CSI மருத்துவகல்லூரி முதல்வர் டாக்டர் தன்வர். மற்றும் டீன் சரவணன் தலைமையில் 50 மருத்துவர்கள் மற்றும் பரிசோதனை குழுவினர் கலந்துகொண்டு 2500 மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. சிகரெட்,புகையிலை, குட்கா போன்ற புகையிலை பொருட்களினால், இந்தியாவில் மவுத் கேன்சர எனப் படும் வாய் புற்றுநோயினால் இந்தியாவில் 6 லட்சம் பேர் மரணிகின்றனர். இனி வரும் 2023ல் 8 லட்சம் முதல் 10 லட்சம் பேர் இறப்பு விகிதம் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்காக மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பரிசோதனைகள் மற்றும் குறும்படம் ஒளிபரப்பபட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி