மதுரை : மதுரை சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நகரத்தினையும் தூய்மையான நகரமாக மாற்றிட மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மை பணி முகாம் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சோழவந்தான் பேரூராட்சி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டு சைக்கிள் பேரணி மூலம் பொது மக்களுக்கு கழிவுகளை தரம் பிரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் , சோழவந்தான் பேரூராட்சி மன்றத் தலைவர் ஜெயராமன் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர், தன்னார்வலர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகள் செய்து மரக்கன்றுகள் நடவு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி