விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலம் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நடையனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 27 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு கட்டிடப் பணிகளையும், செவலூர் பகுதியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில், 32 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், மங்களம் ஊராட்சி மேட்டுப்பட்டி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட வரும் சிறு பாலங்கள் கட்டும் பணிகளையும், எம்.புதுப்பட்டி பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், வட்டார பொது சுகாதார மையக் கட்டிடப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திட்ட இயக்குநர் (மா.ஊ.வ.மு) திலகவதி, செயற்பொறியாளர் சக்திமுருகன், துணை இயக்குநர்(சுகாதார பணிகள்) கலுசிவலிங்கம், உதவி செயற்பொறியாளர் தென்பாண்டிதமிழ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி