மதுரை : மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம், இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பதற்கு நிரந்தரமாக ஒரு அரங்கம் அமைக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்கள்,இந்த நிலையில் அலங்காநல்லூா் அருகே உள்ள கீழக்கரை கிராமத்தில் 66 ஏக்கா் நிலம் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான இடமானது மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு வணிகவரித்துறை அமைச்சர் சுற்றுலாத் துறை அதிகாரிகள் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்,மேலும் இந்த இடத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள், வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து நான்கு மாதங்களுக்குள் விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்கும் அணியின் நடைபெற்றது. இந்த நிலையில் சுமார் 44 கோடி ரூபாய் மதிப்பில் மூன்று தளங்களைக் கொண்ட கட்டிடம் 7212சமீ கட்டிடம் மற்றும் அரங்கம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்த புள்ளி வெளியீடபட்டுள்ளது.
மேலும்,பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் நிரந்தரமாக 5 ஆயிரம் பேர் ஜல்லிக்கட்டை காணும் வகையிலும், தற்காலியாகமாக 20 ஆயிரம் பேர் காணும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, இது மட்டுமில்லாமல் ஜல்லிக்கட்டை காண வரும் வீரர்களுக்கு ஓய்வறை, நிர்வாக அலுவலகம், அவசர சிகிச்சை மையம், காத்திருப்போர் அறை, தொலைக்காட்சி நிருபர்களுக்கான தனி அறை,காட்சிக்கூடம் பிரமுகர்களை என அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கில் கலைநயமிக்க வகையில் காளைகளின் உருவங்கள்,ஒவியங்கள் சிற்பங்கள்,காளைகளுக்கு தனி இடம்,வாகன நிறுத்தகம் உள்ளிட்ட அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் இருக்கும் வகையில் திட்ட வரையறை தயாரிக்கபட்டுள்ளது. இந்த கட்டுமான பணியை மேற்கொள்ள விரும்பும் ஒப்பந்த நிறுவனங்கள் வருகின்ற 24-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என பொதுப்பணித்துறை தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் இரண்டு ஆண்டுகளுக்குள் பணியும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் மதுரையில் கலாச்சார மையமாகவும் ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் வகையில் இந்த அரங்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி