மதுரை:திருவேடகம் மேற்கு, விவேகானந்த கல்லூரியின் அக தர மதிப்பீட்டுக் குழுவின் சார்பாக , திங்கட்கிழமையன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணிவரை ‘ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி’ நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக கல்லூரியின் அகத்தர உறுதி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சதீஷ்பாபு வரவேற்புரை நிகழ்த்தினார். முதல்வர் முனைவர் வெங்கடேசன் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கிருஷ்ணன்கோயில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் உயிரி தொழிலநுட்பவியல் துறை, இணைப் பேராசிரியர் முனைவர் முத்துக்குமரன் “Training on OBE-CO, PO/PSO Attainment” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். விவேகானந்த மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் செந்தில்நாதன், வாழ்த்துரை வழங்கினார். கல்லூரியின் செயலர் சுவாமி வேதானந்த மற்றும் கல்லூரியின் குலபதி சுவாமி அத்யாத்மானந்த, கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் கார்த்திகேயன், முதன்மையர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் சஞ்சீவி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். நிறைவாக விலங்கியல் உதவிப்பேராசிரியர் முத்துப்பாண்டி நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வை ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் சரவணகுமார் தொகுத்து வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி