மதுரை : மதுரை ஸ்ரீ பால கோபாலன் ஜூவல்லரி உரிமையாளர் செந்தில் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் இதனை பயன் படுத்தி தர உத்தரவாதம் தரும் பி.ஐ.எஸ். ஹால்மார்க்கிங் நகைகளையே கேட்டு உறுதி செய்து வாங்குமாறு அவர் மேலும் கேட்டு கொண்டார்.
இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஹால்மார்க் முத்திரை என்பது மூன்று குறியீடுகளைக் கொண்டுள்ளது. பிஐஎஸ் குறியீடு, தரம் மற்றும் தூய்மை குறியீடு மற்றும் எண் ஆகியவை இடம்பெற்று இருக்கும். எந்த தங்க நகையும் முழுமையாக தங்கம்
கிடையாது. கண்டிப்பாக இதர உலோகங்கள் கலக்கப்படும். அதன் மூலம் தான் நமக்கு ஏற்றது போல் தங்க நகைகளை வடிவமைக்க முடியும். கலக்கப்படும் உலோகங்களின் அளவை பொருத்து அதனின் விலை அமையும். ஹால்மார்க் முத்திரை மூன்று விதமாக பிரிக்கப்படுகிறது. 22K 916 என்றால் 22 காரட் தங்கம். இதில், 91.6 சதவீதம் தங்கம் இடம் பெற்று இருக்கும். 18K 750 என்றால் 18 காரட் தங்கம், இதில் 75 சதம் தங்கம் இடம் பெற்று இருக்கும்.
14K தங்கம் என்றால் , 858 என்றால் 14 காரட் தங்கம். இதில், 58.5 சதம் தங்கம் இடம்பெற்று இருக்கும். உண்மையான ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை நாம் வாங்கும் போது அதற்கான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். வங்கியில் தங்க நகைக் கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது. நீங்கள் சிறிது சிறிதாகச் சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதைக் கவனித்து வாங்கவும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி