மதுரை : மதுரை தாசில்தார் நகர், அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில், இரண்டாவது சனிக்கிழமை முன்னிட்டு, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமிதேவிக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை ஒட்டி, திருக்கோயில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூமிதேவிக்கு பால், தயிர் ,இளநீர் போன்ற அபிஷே திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து அலங்காரம் நடைபெற்றது. இதை அடுத்து, கோயிலின் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அர்ச்சனைகள் நடந்தது. இதை அடுத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, சித்தி விநாயகர் கோவில் நிர்வாக குழு மற்றும் மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர். இதே போல, மதுரை மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயத்தில் , சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு இக்கோவில் அமைந்துள்ள நரசிம்மருக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நரசிம்மர் மற்றும் சக்கரத் தாழ்வாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து, நரசிம்மருக்கு பானகம் மற்றும் பிரசாதங்கள் படைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை, சௌபாக்கிய விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் மகளிர் குழுவினர் செய்தனர். தேய்பிறை பஞ்சமி விழா : மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமி விழா மார்ச் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கோயில் அமைந்துள்ள வராகி அம்மன் சன்னதியில், சண்டி ஹோமமும், அதைத் தொடர்ந்து வராகி அம்மனுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும் .
இதை அடுத்து, அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அர்ச்சனைகள் நடைபெறும். அர்ச்சனை முடிந்த பிறகு, பக்தர்களுக்கு கோயில் நிர்வாக சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படும். இந்த கோயிலிலே, மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில், வராகி அம்மனுக்கு ஹோமங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி