விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டி கிராமத்துக்கு சொந்தமான 4 கண்மாய்கள் உள்ளது. இதில், முசிலான் ஓடை கண்மாயில், தனி நபர்கள் கிராவல் மண் அள்ளுவதற்கு ஏற்பாடு செய்தனர். இந்த தகவல் கிடைத்ததும், பொதுமக்கள் சார்பாக சென்று கண்மாயில் கிராவல் மண் எடுக்க கூடாது என்று தடுத்து நிறுத்தினோம். மேற்கண்ட கண்மாயில் எவ்வித அனுமதியின்றியும், ஊராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல், கிராவல் மண் அள்ள ஏற்பாடு செய்துள்ளனர். ஏற்கனவே , முசிலோன் ஓடை கண்மாயில் நான்கு வழிச்சாலைக்கு கிராவல் மண் எடுத்ததால், குண்டும் குழியுமாக காணப்படுகிறது – அருகில் உள்ள தனியார் கல்லூரி கழிவுநீர் கண்மாயில் தேங்கி கிடக்கிறது. இதனால், சுற்றுபுறங்களில் உள்ள கிணறுகளில் தண்ணீர் மாசுபட்டுள்ளது. எங்கள் கிராமத்தின் விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கும் கண்மாய்களில் கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்