சிவகங்கை : சிவகங்கை மாவட்ட திராவிட கழக ஏற்பாட்டில் நமது மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி M. K. Stalin 70 மற்றும் பேராசிரியர் கி.வீரமணி அய்யா 90 ஆவது பிறந்தநாள் அறிவுசார் கருத்தரங்கம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் நமது சிவகங்கை மாவட்டச் செயலாளர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் மாண்புமிகு கே.ஆர். பெரியகருப்பன் மற்றும் இலக்கிய தென்றல் முன்னாள் அமைச்சர் மாண்புமிகு மு.தென்னவன் ஐயா முன்னிலை வகித்தார்கள். மாநில மாணவர் அணி தலைவர் வழக்குரைஞர் மரியாதைக்குரிய திரு.ராஜீவ்காந்தி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். மற்றும் நகர்மன்ற தலைவர் வணக்கத்துக்குரிய சே. முத்துதுரை மற்றும் நகரக் கழகச் செயலாளர் வணக்கத்துக்குரிய நா.குணசேகரன் மற்றும் திராவிட கழக மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சொந்தங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி