மதுரை : மதுரை ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா கொண்டாட்டம் நள்ளிரவு திருப்பலி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி (22/02/2023), சாம்பல் புதன் முதல் கடைபிடித்து வந்த தவக்காலத்தை இன்று ஈஸ்டர் எனும் கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழாவோடு நிறைவு செய்தனர். இதை முன்னிட்டு சனிக்கிழமை நள்ளிரவு அனைத்து ஆலயங்களிலும் திருப்பலி மற்றும் ஆராதனைகள் நடைப்பெற்றன. மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.
அண்ணா நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின் சகாயராஜ், ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை ஆனந்த், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ், அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை லூர்து, உதவிப ங்குத்தந்தை ஜான்சன். மற்றும் செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன் ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம். எல்லிஸ் நகர் தூய செபஸ்தியார் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலியும், CSI மற்றும் புதிய ஜீவிய சபை உள்ளிட்ட பிற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4 மணிக்கு ஈஸ்டர் ஆராதனைகள் நடைபெற்றன. அனைத்து நிகழ்வுகளிலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்களாக கலந்து கொண்டார்கள். ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்துடன் கிறிஸ்தவர்கள் தங்கள் தவக்காலத்தை நிறைவு செய்தனர். முன்னதாக விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டு குருவானவர் ஒளி உண்டாகட்டும் என்ற போது அனைவரும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஒளிரச் செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்