விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே புதிய வழித்தடத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கிவைத்தார். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் பணிக்குறிப்பு கிராமத்திலிருந்து, காரியாபட்டிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பொதுமக்கள் அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கூடுதல் பஸ் வசதி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில், காலை மாலை இரண்டு வேளை பஸ் வசதி செய்து கொடுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பேரில், புதிய வழித்தடம் ஏற்பாடு செய்யப்பட்டது. புதிய வழித்தடம் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய பஸ் வழித்தடத்தை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் , அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் வார்த்தக பிரிவு மேலாளர் ஒன்றியச் செயலாளர் கண்ணன், பேரூராட்சி தன் தலைவர் செந்தில், மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வாணன், பொதுக்குழு உறுப்பினர் சிவசக்தி, புதுப்பட்டி ஊராட்சி மன்ற துணைத்
தலைவர் ஜெய்கணேஷ், ஒன்றிய கழக துணைச்செயலாளர் குருசாமி, தி.மு.க பிரமுகர் சின்ன போஸ், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் முருகன், ஆகியோர் கலந்துகொண்டனர். புதிய வழித்தடத்தை ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு, பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி