திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நெய்தவாயல் ஊராட்சியில். ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து,துனை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு துனைதலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் செல்வி சேகர்,சுரேஷ், அஸ்வினி சதீஷ், ரத்தினம்மாள் தேவன், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் கலந்து கொண்டு இந்த ஊராட்சியில் மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் திட்டங்கள் சென்று சேரவில்லை எனவும், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தில் 100 நாட்கள் வேலை என கூறி குறைந்த நாட்களே வேலை வழங்கி பொதுமக்களை ஏமாற்றுவதாகவும், சமுதாயக்கூடம் கட்ட பலமுறை கிராம பொதுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் அதற்கு எந்த ஒரு நடவடிக்கும் எடுக்காததை கண்டித்தும்,
மூன்றாவது வார்டு மற்றும் நான்காவது வார்டிற்கு மின்பற்றாக்குறைக்காக மின்மாற்றி அமைக்க பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறியும் ,குடிநீருக்காக உயர் குடிநீர் நீக்க தேக்கதொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பழுதடைந்த நிலைமையில் அரசு நிதியை வீணாக்குவதை கண்டித்தும், பஞ்சாயத்தில் ஏற்படும் துணைத் தலைவர் பதவி மற்றும் துணை அதிகாரம் குறித்த பிரச்சினைகளை கண்டித்தும், அரசாங்கத்தால் வீடு கட்டும் திட்டத்திற்கு கணக்கு கொடுக்கப்பட்டு நான்கு வருடம் கடந்து இதுநாள் வரையில் வீடு வழங்கவில்லை என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சமரசம் பேசவந்த மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் மற்றும் நெய்தவாயல் ஊராட்சி மன்ற தலைவர் பாலன் ஆகியோரை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சிறை பிடித்து கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு