மதுரை : மதுரை சோழவந்தான் நயினார் ஜிம்மா தொழுகை பள்ளிவாசலில் ரம்ஜான் 30-ஆம் நாள் நோன்பை அல்லாஹ்விற்காக நிறைவேற்றி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கூடினர் காலை 8 மணி அளவில் ஹஜரத் முகமது யாசின் குத்பா ஓதினார் பின் இறையருள் பணித்த 30 நாட்களில் நோன்பின் மகத்துவம் அல்லாஹ் நமக்கு அளித்த வரம் அன்பின் தத்துவம் பிறருக்கு உதவுதல் தினம் ஐந்து நேரத் தொழுகை இறைவனால் உலகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் புனித நூலான குர்ஆனின் அறிவுறுத்தலின்படி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி மனித நேயத்தின் வழிகாட்டுதலில் மாண்பு பற்றி விளக்கினார் பின்னர் ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினார் முஸ்லிம்கள் ஒருவரை ஒருவர் சலாம் கூறி ரமலான் இனிய நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.
கீழமாத்தூர் தொழுகை பள்ளிவாசல்களில் ஏராளமான முஸ்லிம்கள் கூடினர் ஹஜரத் சலீம் ராஜா இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர் ஆனின் மகத்துவத்தின் அறிவுறுத்தலின் ஐந்து கடமைகளை முஸ்லிம்கள் கடைபிடித்து அதன்படி மனித நேயத்துடன் அன்பு பாசம் ஒற்றுமை பிறருக்கு உதவுதல் போன்ற புனித நூலின் தத்துவத்தின் படி வாழ வேண்டும் மரணிக்கும் போது ஆத்மா சாந்தி பெற அல்லாஹ் சொர்க்கத்தின் கதவுகளை திறந்து வைப்பார் என்றும் 30 நாள் நோன்பின் புனிதத்தை விலக்கிப் பேசினார். பிறகு ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினார் காமாட்சிபுரம் பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனின் மகத்துவத்தைப் பற்றி ஹஜ்ரத் அப்துல் காதர் விளக்கி ரம்ஜான் சிறப்பு தொழுகையை நடத்தினார் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் தொழுது ரமலான் வாழ்த்துக்களை கூறி மகிழ்ந்தனர் இதுபோல் தேனூர் சமயநல்லூர் திருவாளவாயநல்லூர் திருவடகம் மேலக்கால் கருப்பட்டி நாச்சிகுளம் வாடிப்பட்டி கச்சை கட்டி ஆகிய பகுதி பள்ளிவாசலில் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி