இந்தியாவில் 79வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாய் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யா கிரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ செல்வன் பிரானேஷ் தனது 15 வயதில் சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் வித்தியாகிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவ செல்வன் பிரானேஷ் இன்று சென்னையில் தமிழ்நாடு மாண்புமிகு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
தொடர்ந்து சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் இல்லத்திற்கு சென்று மதிய விருந்து நிகழ்ச்சியில் மாணவச் செல்வன் பிரானேஷ் மற்றும் குடும்பத்தார்கள் கலந்து கொண்டார்கள்.அதனைத் தொடர்ந்து மரியாதைக்குரிய விசுவநாதன் ஆனந்த் அந்த மாணவச் செல்வன் பிரானேஷ் மற்றும் குடும்பத்தார்களை சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு வழி அனுப்பி வைத்தார்.
“பாரத ரத்னா” விருதுக்கு இணையான “கிராண்ட் மாஸ்டர்” பட்டம் வென்று, சென்னை வழியாக காரைக்குடிக்கு இன்று அதிகாலையில் வருகை தந்த சதுரங்க விளையாட்டில் உலக சாதனை படைத்த சுவீடன் நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற , புதுவயல் ஸ்ரீ வித்யாகரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவன் செல்வன்.பிரனேஷ் இன்று காரைக்குடி வருகை தந்த போது எடுத்த படம். பேருந்து நிலையத்தில் வைத்து வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது .
அதனைத் தொடர்ந்து இன்று ஸ்ரீ வித்ய கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்வி நிறுவனக் குழுவின் தலைவர் மரியாதைக்குரிய கிருஷ்ணன் அவர்கள்,ஸ்ரீ வித்ய கிரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினருமான மரியாதைக்குரிய டாக்டர் முனைவர் ஆர் சாமிநாதன் அவர்கள் மற்றும் ஸ்ரீவித்யகிரி கல்வி நிறுவனங்களின் பொருளாளர் மற்றும் புதுவயல் பேரூராட்சி மன்ற தலைவருமான முகமது மீரான் அம்பாள் அவர்கள் மற்றும் சிஇஓ ஐஸ்வர்யா அவர்கள், ஸ்ரீ வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் மரியாதைக்குரிய ஹேமா மாலினி சாமிநாதன் மற்றும் மரியாதைக்குரிய குமார் அவர்கள் மகிழ்ந்து வாழ்த்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி