திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 1ஆம் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் கோவிந்தன், சுப்புராயலு ஆகிய இருவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் சடலங்களை மீட்டனர். இதனையடுத்து பள்ளி தாளாளர் சிமியோன் விக்டரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா 15லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மறுத்ததால் பள்ளிக்கு மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.
இதனிடையே பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். தமிழ்நாடு அரசு உயிரிழந்த தொழிலாளர்களின் குடுபத்திற்கு துணை நின்று அனைத்து உதவிகளையும் செய்யும் என ஆறுதல் கூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு