மதுரை : மதுரை மே 13 ரஷ்ய அரசின் உதவியுடன் 5ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு மதுரையில் எம்பிபிஎஸ் சேர்க்கையும் பொறியியல் மாணவர்களுக்கு இலவச சேர்க்கையும் நடைபெறுகிறது. இது குறித்து ரஷ்ய தூதராக கலாச்சார மையத்தின் இந்திய மாணவர்களுக்கான சேர்க்கை பிரிவு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரெச்கோஓலிஸ்யா கூறியதாவது.
ரஷ்யாவில் உள்ள அரசு மருத்துவ பல்கலைக்கழகங்கள் 2023 -24 ஆம் கல்வி ஆண்டுக்கு இந்திய மாணவர்களுக்கு 5ஆயிரம் மருத்துவ இடங்களை ஒதுக்கி உள்ளன. இதற்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 16-ஆம் தேதி மதுரையில் நடக்கிறது. அத்துடன் ரஷ்யாவில் உள்ள மருத்துவம் மற்றும் என்ஜினியரிங் கல்லூரிகளின் கல்வி கண்காட்சியும் நடக்க உள்ளது. இந்திய தேசிய மருத்துவ கமிஷனின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை ரஷ்ய பல்கலைக்கழகம் முழுமையாக கடைப்பிடித்து வருகின்றன. ரஷ்யாவின் எம்பிபிஎஸ் கல்வி இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ரஷ்ய பல்கலைக்கழகங்கள் உதவியுடன் இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் தேவையான உதவிகளை செய்து கொடுத்தது.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் 12 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று இருக்க வேண்டும் எஸ்சி ,எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 40% மதிப்பெண்கள் பெற்று இருந்தால் போதுமானது. சிஇடி மற்றும் ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற முன் தகுதி தேர்வுகள் தேவை இல்லை. கல்வி கட்டணமாக வருடத்துக்கு 3500 முதல் 6000 அமெரிக்க டாலர் வரை செலவாகும். ரஷ்ய அரசின் வருடாந்திர உதவித்தொகையும் தேர்வு செய்யப்படும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவ படிப்பு தவிர பொறியியல் படிப்பு போன்ற பிற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு 100% கட்டண சலுகை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது உடன் இந்திய மாணவர் செர்க்கைப் பிரிவு இயக்குனர் சுரேஷ் மற்றும் தூதரக அதிகாரிகள் இருந்தன.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி