விருதுநகர் மாவட்டம்,
கல்லூரணியில், தொழுநோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே கல்லூரணி அரசு மருத்துவமனை மற்றும் ஸ்பீச் நிறுவனம் சார்பாக தொழுநோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனை முகாம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு, சுகாதார பணிகள் துணை இயக்குநர் யசோதமணி தலைமை வகித்தார். துணை இயக்குநர் யமுனா முன்னிலை வகித்தார் .
முகாமில், வட்டார மருத்துவ அலுவலர்கள் ஜெயசோபியா, மற்றும் அரவிந்தன் சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோர் தொழு நேயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார்கள். முகாமில் ,
ஸ்பீச் நிறுவனம் சார்பாக 30 நபர்களுக்கு தேவையான பெட்ஷீட்|உபகரணங்கள் வழங்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி