திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய தேவதானம் ஊராட்சி குமரசிறுளப்பாக்கம் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழா, இவ்விழாவிற்கு பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி எட்டியப்பன் , வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், நாடாளுமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் ரூ.9.99 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. ஜெயக்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிலையத்தை திறந்து வைத்தார் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் இருப்பதாக அறிந்து, கிராம மக்களின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த நிலையம் இங்கு திறக்கப்பட்டுள்ளது என பேசினார், இதில் ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார், காட்டுப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, காங்கிரஸ் நிர்வாகிகள் தாரிக், முகமதுஅல்டாப், கல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியங்காதுரைராஜ், உள்ளிட்ட திரளான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு