திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது, இம்முகாமிற்கு பா.ஜ.க, மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன், மீஞ்சூர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் மீஞ்சூர் வட்டார கௌரவத் தலைவர் ஏ.கே.சுரேஷ், வட்டாரத் தலைவர் ஏ.சி. ராஜேந்திரன் செயலாளர் வழக்கறிஞர் முகமது அலி பொருளாளர் ராஜேந்திர குமார், துணைத்தலைவர் அலெக்சாண்டர், நகர தி.மு.க, செயலாளர் தமிழ் உதயன் , உள்ளிட்டவர்கள் முன்னிலைவகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பயணிகள் வசதிகள் குழு ரயில்வே அமைச்சகம் எம். கே. ரவிச்சந்திரன் கலந்துகொண்டு
அப்பகுதி பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரியும், விரைவில் சுரங்கபாதை அமைத்து தரக்கோரியும் ,ரயிலில் பிச்சை எடுப்பவர்களின் அட்டூழியம் தடுத்து நிறுத்த வேண்டும், கும்முடிபூண்டி மார்க்கத்திற்கு கூடுதலாக ரயில் இயக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். இதில் மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த வணிகர் சங்க பேரவை மாவட்ட தலைவர் ஷேக்அகமது, பாலன், கதிர்வேல், வியாபாரிகள் சங்க வழக்கறிஞர்கள் விஷ்ணுகுமார், தங்கமணி,மணிகண்டன், அ.தி.மு.க நகர செயலாளர் பட்டாபிராமன், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டுதங்களது குறைகளை தெரிவித்தனர். அதனைக் கேட்டு அறிந்தவர் இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதிகூறினார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு