திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய 6. ஊராட்சிகளில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது, இம்முகாமிற்கு மீஞ்சூர் ஒன்றிய கழக அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி அமைப்பாளர் பி.டி.பானுபிரசாத், கொண்டக்கரை அமிர்தலிங்கம், வழக்கறிஞர்கள் மாரி, திருமலை, செல்வகுமார் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர், இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம்,பி. பலராமன் கலந்துகொண்டு வன்னிபாக்கம், சிறுவாக்கம் , தடபெரும்பாக்கம் , ஆலாடு,பெரும்பேடு, ஏறுசிவன், ஏ ரெட்டிபாளையம், கொடூர், உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் அடங்கிய 8.கிராமங்களில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்களை தலைமை ஏற்று நடத்தி உறுப்பினர் படிவங்களை வழங்கினார், இதில் அவருடன் திரளான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு