விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முறம்பு மில்கேட்.
பானங்குளம், கோபாலபுரம், சிவலிங்காபுரம். கொருக்காம்பட்டி . வரகுணராமபுரம், ஆகிய 6 கிராமங்களுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 88 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக்கடை நிழல்குடை ,சிமெண்ட் சாலை,
உள்ளிட்டவைகளுக்கு சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன் பூமி பூஜை செய்தார். மதிமுக மாவட்டச் செயலாளர் வேல்முருகன், திமுக ஒன்றியச் செயலாளர் ஞானதாஸ் , மதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் மனோகரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், மதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி