விருதுநகர் : விருதுநகர் மாவட்டம். மல்லாங்கிணர் பேரூராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன் பவுண்டேஷன் சார்பாக நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் ஓராண்டு நிறைவு நாள் நிகழ்ச்சி மல்லாங் கினறில் நடைபெற்றது. பேரூராட்சித்தலைவர் துளசிதாஸ் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மிக்கேல் அம்மாள், செயல் அலுவலர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு, சுற்றுப்புற சூழலை சுழலை பாதுகாப்போம் நகரங்களை தூய்மையாக வைத்துக் கொள்வோம் எனது குப்பை எனது பொறுப்பு என்ற உறுதி மொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியை முன்னிட்டு, ஊரணி கரையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை, பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், வேளாண்மை துறை தொழில்நுட்ப மேலாளர் முத்து கருப்பன் | துணை மேலாளர் கணேசன் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் போஸ், எஸ்.பி. எம். அறக்கட்டளை நிறுவனர் அழகர்சாமி,
க்ரீன் பவுண்டேஷன் நிர்வாகி ஆசிரியர் பொன்ராம், வழக்கறிஞர் சங்கம் துணைச் செயலாளர் செந்தில்குமார், சமுத்திரம் அறக்கட்டளை நிர்வாகி முத்துராஜா, ஒய்வு பெற்ற விமானபடை வீரர் ரமேஷ், மனித பாதுகாப்பு கழக மாவட்ட நிர்வாகிகள் பிரின்ஸ், முனியசாமி, பேரூராட்சி திடக்கழிவு கள அலுவலர் ரமேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி